பொது செய்தி

தமிழ்நாடு

'அப்பாஸ் கல்சுரல்ஸ்' கலை விழா

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை : 'அப்பாஸ் கல்சுரல்ஸ்' கலை விழா, சென்னையில் நேற்று கோலாகலமாக துவங்கியது.'அப்பாஸ் கல்சுரல்ஸ்' கலை விழா, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், நேற்று துவங்கியது.

19ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவை, பின்னணி பாடகர்கள், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.கர்நாடக கச்சேரிதொடர்ந்து, பாலாஜி ஆராதனா பாண்ட் இசைக்குழுவினருடன், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடல்களை பாடி அசத்தினார்.தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் மதியம், 2:00 மணி, மாலை, 4:00 மணி மற்றும் இரவு, 7:00 மணிக்கு, பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதில், ராஜேஷ் வைத்தியாவின் வீணை, கே.ஜே.ஜேசுதாஸ், சுதா ரகுநாதன், ரஞ்சனி காயத்ரி, ஓ.எஸ்.அருண், மும்பை ஜெயலட்சுமி, அருணா சாய்ராம், நித்யஸ்ரீ, சித்ஸ்ரீராம், சூப்பர் சிங்கர் அனிருத், ஜெயஸ்ரீ வைத்தியநாதன், சூர்யா காயத்ரி, கீபோர்டு சத்யா ஆகியோரின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

விபரம்அத்துடன் சொற்பொழிவுகள், பியூஷன் கச்சேரிகள், வாத்திய இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் இடம் பெறுகின்றன. ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் செய்துள்ளார்.கலை விழாவிற்கான டிக்கெட்டுகள், காமராஜர் அரங்கில் தினமும் கிடைக்கும். ஆன்லைனில் டிக்கெட் பெற, www.abbascultural.com என்ற இணைய தளத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 97106 33653 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X