கட்டுப்பாடுகள் 7 நாட்களுக்குள் மறு ஆய்வு: ஜம்மு -- காஷ்மீர் நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (8)
Advertisement
Court,Kashmir,SupremeCourt,காஷ்மீர்,கோர்ட்,சுப்ரீம்கோர்ட், நீதிமன்றம்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை, ஏழு நாட்களுக்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என, யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்தது. அதற்கு முன், மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க, முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட, 400க்கும் அதிகமான அரசியல் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.


முடக்கம்:

மேலும், ஜம்மு - காஷ்மீர் முழுவதும், மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வசதி, இணைய வசதி மற்றும் தொலை பேசி வசதி முடக்கப்பட்டன. பல்வேறு இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இரண்டும், கடந்த ஆண்டு அக்டோபர், 31ல் நடைமுறைக்கு வந்தன. ஜம்மு - காஷ்மீரில், அமைதி திரும்ப துவங்கியதையடுத்து, யூனியன் பிரதேச நிர்வாகம், பல்வேறு வசதிகளை படிப்படியாக அளித்து வந்தது.

இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பல்வேறு தரப்பினர் சார்பில், பொது நல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

'ஜம்மு - காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், துப்பாக்கி குண்டு சத்தம் கேட்கவில்லை; ஒரு உயிர் கூட பலியாகவில்லை' என, தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின், கடந்த ஆண்டு, நவ., 27ல், நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில், நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், நீதிபதிகள் கூறியதாவது: இணையதளம் என்பது, கருத்துரிமையின் ஒரு பகுதியே. இணையதளம் வழியாக கருத்து சுதந்திரம் என்பது, அரசியல் சாசன பிரிவு, 19ன் கீழ் வருகிறது.


144 தடை உத்தரவு:

தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது, நீதிமன்றம் மற்றும் அரசின் கடமை. அசாதாரண சூழ்நிலையில் இணையத்தை முடக்கினாலும், காலவரையறை இன்றி முடக்குவதை ஏற்க முடியாது. அனைத்து கட்டுப்பாடுகளையும் மறு பரீசீலனை செய்ய, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான், சுதந்திர போராட்டங்களை முடக்க, 144 தடை உத்தரவு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இப்போது, போராட்டங்களை முடக்க, அதே ஆங்கிலேயர் காலத்து சட்டத்தை பயன்படுத்துவது, அதிகார துஷ்பிரயோகம் என்றே கருத வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 'இணைய வசதி இல்லாததால், எங்களின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 'இப்போது, இணைய வசதியை வழங்க. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது. 'ஏனெனில், இன்றைய காலகட்டத்தில், இணையவசதி இல்லாமல், எதுவும் செய்ய முடியாது' என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


மத்திய அரசுக்கு மரண அடி:

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறியதாவது: இணையவசதி அடிப்படை உரிமை என்றும், எதிர்ப்பை, தடையுத்தரவு போட்டு தடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுந்த மரண அடி. அரசியல் சட்டத்துக்கு தான், நாடு தலை வணங்க வேண்டும்; தங்களுக்கு அல்ல என்பதை, மோடியும், அமித் ஷாவும் உணர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


வர்த்தகர்கள் மகிழ்ச்சி:

இணையதள வசதியை வழங்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை, காஷ்மீரைச் சேர்ந்த வர்த்தகர்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
11-ஜன-202011:44:15 IST Report Abuse
M S RAGHUNATHAN Is Supreme Court is aware of the fact that an MP was ghearoed by students of a university in Kolkata. What is the remedy for such acts by these students abetted by disgruntled political parties. When the West Bengal governor went for a convocation as chancellor of the university, he was prevented by the political goons and rowdy students. Why was SC silent. Why it did not take action those who are responsible for these act. Let SC set it's house in order. How and why very senior judges throwing the decency of judicial sense conducted an unprecedented press conference. The people of hypocrites of highest order.
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
11-ஜன-202011:36:26 IST Report Abuse
M S RAGHUNATHAN Well it is high time the SUPREME COURT dismissed the duly elected Central and State Governments and take the responsibility of running the administraton. If a possible volatile situation can develop, the state law and order machinery has to take preventive steps to avert tragedies. If as per SC's observations Sec 144 should not be imposed, will SC take responsibility of the consequences. Now a days, the observations of SC are bordering on stupidity. The SC says the freedom of expression is a fundamental right, but when a person critisizes the Court, it initiated contempt of Court. Is this not contradictory? I remember what Jayalalitha said once whether the Judges have come down from heaven (she said CBI,). This is correct.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
11-ஜன-202009:21:40 IST Report Abuse
GMM பொது இடங்களில் கருத்து கூறலாம். இணைய தளங்களில் தனிபட்ட தகவல் தீவிரவாத கருத்தாக இருக்கலாம். அரசு நிலைமை சீர்செய்ய வேண்டும். காஷ்மீர் போராட்டம் சலுகை மோல் சலுகை. பண்டிட் சமூகம் சிதைக்கப்பட்டது. தினமும் கலவரம். உயிர் சேதம். ராணுவ வீரர்கள் மரணம். எதிரியின் பண, ஆயுத பலம். ஆக்கிரமிப்பு. பின் பிரிவினை வாதம். 144 தடை ஒரு சாதாரண நடவடிக்கை. நாட்டின் நலம் கருதி செயல் பட பெரும்பாலும் அரசியல் கட்சிகள் தயங்கும். ஒரு ஓட்டு வெற்றி யை தீர்மானிக்க முடியும். கட்டுப்பாடு கால நிர்ணயம் நிர்வாக பணி. நாட்டில் நிர்வாக, நீதித்துறை சீர்திருத்தம் அவசியம்.
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-ஜன-202021:15:09 IST Report Abuse
Mirthika Sathiamoorthiயாப்பா என்ன ஒரு கொடுமை...எவ்வளவு பிரச்சனைகள்...இதன்மூலம் ..ஜம்மு காஸ்மீரும் இன்னொரு பீகார் ஜார்கண்டு மாதிரி வளர்ச்சியே இல்லமால் இருந்துச்சுன்னு இபபோ புரியுது..இந்த மத்திய அரசின் நடவடிக்கை மூலம் இனி ஜம்மு சிங்கபூராக மாற எல்லாம் வல்ல ராமனை பிராத்திப்போம்..ஜெய் ஸ்ரீராம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X