பொது செய்தி

தமிழ்நாடு

கணினி மூலம் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி

Added : ஜன 11, 2020
Advertisement
 கணினி மூலம் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி

நெல்லிக்குப்பம்:தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு, கணினி மூலம், தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் முதல்கட்டமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது சோதனை அடிப்படையில் 8 மாவட்டங்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் கணினி மூலம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் கடலூர் மாவட்டத்தில் 6 பள்ளிகளில் இதுபோன்ற தேர்வு நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் கணினியில் ஆன்லைன் மூலம் வந்த கேள்விகளுக்கு விடையளித்தனர்.

இதன்மூலம் வேலைக்கான தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் கூறினர். உதவிதிட்ட அலுவலர் பாலவிநாயகம், தலைமையாசிரியர் தேவநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ரகு கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X