குறைந்த கட்டணத்தில், ஏசி பஸ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த கட்டணத்தில், 'ஏசி' பஸ்

Added : ஜன 11, 2020

சென்னை : சென்னையில், குறைந்த கட்டணத்தில், 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. எம்.டி.சி.,யின் சார்பில் வடிவமைக்கப்பட்ட, 'ஏசி' பஸ்சை, நேற்று முன்தினம் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிலையில், நேற்று முதல், சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் குறைந்த கட்டணத்தில், 48 'ஏசி' பஸ்கள் இயக்கப்பட்டன. 36 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள இந்த பஸ்சில், 40 பேர் அமர்ந்தும், 20 பேர் நின்றும் பயணிக்கலாம்.ஏற்கனவே சென்னையில் இயக்கப்பட்ட, 'வால்வோ' பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம், 28 ரூபாய். தற்போதுள்ள பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், 15 ரூபாய்.கோயம்பேடு முதல் சிறுசேரி வரை பயணிக்க, 60 ரூபாய்; தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை பயணிக்க, 45 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏ1, 19 பி, 70 வி, 102, 95 ஆகிய வழித்தடங்களிலும், இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X