பொது செய்தி

தமிழ்நாடு

40 எம்.எம்.1 - 10.1.2020

Added : ஜன 11, 2020
Share
Advertisement

பொங்கல் நிகழ்ச்சி புதிது!'கலைஞர் டிவி'யில், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக, வரும், 15, காலை, 8:00 மணிக்கு, இல்லறத்தில் இணைந்த நட்சத்திர ஜோடிகள் கொண்டாடும், 'தல பொங்கல்' நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.அதைத் தொடர்ந்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பங்கேற்கும், தலைவரின் பள்ளிக்கூடம் மற்றும் பட்டிமன்றம் உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.மதியம், 1:30 மணிக்கு, சுசீந்திரன் இயக்க, நரேன், மனோஜ் பாரதிராஜா நடித்த, சாம்பியன் படமும், மாலை, 4:30 மணிக்கு, ராம் இயக்கத்தில், மம்முட்டி, அஞ்சலி நடித்த, பேரன்பு படமும் திரையிடப்படுகிறது.

மாட்டுப் பொங்கலான, வரும், 16 அன்றும், சிறப்பு நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. அதோடு மதியம், 1:30 மணிக்கு, கிரிஷ் இயக்கத்தில், நந்தா நடித்த, ழகரம் படமும், மாலை, 4:30 மணிக்கு, ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், விக்ராந்த், வசுந்தரா நடித்த, பக்ரீத் படமும் ஒளிபரப்பாகின்றன. திருநாளை கொண்டாடுவோம்!'பெப்பர்ஸ் டிவி'யில், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக காலை, 8:30 மணிக்கு, 'மை பேஷன் சினிமா' என்ற தலைப்பில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தரரான, தனஞ்ஜெயன் உடன் ஒரு சந்திப்பு இடம் பெறுகிறது.நாட்டுப்புற கலைஞர்களின் கானமும், நடனமும் என்ற நிகழ்ச்சி காலை, 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 9:30 மணிக்கு, 'மை தர்பார்' பட கலை இயக்குனர், சந்தானம் உடன், ஒரு ஓபன் டாக்! பப்ஜி படக்குழுவினருடன், 10:30 மணிக்கு உரையாடல்.

அடுத்த நாளான, 16ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, பாரம்பரிய பொங்கல் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. 9:00 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் அந்தோணிதாசின், லொள்ளு பாட்டு, 9:30 மணிக்கு, கல்தா படக்குழுவினருடன் கலகல சந்திப்பு. இதைத் தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X