கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு நீதிபதி தலைமையில் குழு

Added : ஜன 11, 2020
Advertisement

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் 2019 ல் ஜல்லிக்கட்டு நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்ததுபோல், இம்முறையும் நீதிபதி தலைமையில் குழு அமைப்பது குறித்து ஜன.,13 ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து வெளியிட்டது.

தைப்பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜன.,15 ல் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவனியாபுரத்தைச் சேர்ந்த சில தரப்பினரிடையே சர்ச்சை நிலவியது. அரசுத் தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு விழாக்குழு தொடர்பாக மதுரை கலெக்டர் ஜன.,3 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். இது ஒரு தனிநபரை முன்னிலைப்படுத்துவதாகவும், கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து, அவனியாபுரம் கிராம மக்கள் சார்பிலான விழாக்குழு ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவனியாபுரத்தில் அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய விழாக்குழு அமைத்து, ஜல்லிக்கட்டு நடத்தவும், குழுவில் தங்கள் பெயரையும் இடம் பெற உத்தரவிடக்கோரியும் தனித்தனியே மனுக்கள் தாக்கலாகின.

அலங்காநல்லுாரில் ஜன.,17 ல் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கான விழாக்குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கலானது. இதுபோல் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.

அரசுத் தரப்பில், 'ஜல்லிக்கட்டு நடத்த குழு அமைத்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை உட்பட பல்வேறு துறைகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன,' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள்,'அவனியாபுரத்தில் 2019 ல் ஜல்லிக்கட்டு நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல் இம்முறை எந்த நீதிபதி தலைமையில் குழு அமைப்பது என்பது குறித்து ஜன.,13 ல் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்,' என வாய்மொழியாக கருத்து தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று விசாரணைக்கு வந்த அனைத்து வழக்குகளையும் ஜன.,13 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X