கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தவறான தகவல்: மாஜி ராணுவ வீரருக்கு அபராதம்

Added : ஜன 11, 2020
Advertisement

மதுரை: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம் துறையூர் பால்பாண்டியன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: நான் ஓய்வு பெற்ற ராணுவ வீரன்.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக செந்தில்முருகன் (சுயே.,) வெற்றி பெற்றார். இவர் மனு தாக்கல் செய்யும் போதே வாபஸ் பெறுமாறு மிரட்டல் வந்தது. ஜன.,3 ல் அவரை ஒருவர் காரில் கடத்தினார். கொப்பம்பட்டி போலீசில் புகார் செய்தேன். செந்தில்முருகனை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. செந்தில் முருகன் ஆஜராகி, ''என்னை யாரும் கடத்தவில்லை. மனுதாரர் யாரென்று தெரியாது. கட்சிக்காரர்களின் தொந்தரவைத் தவிர்க்க கேரளாவில் இருந்தேன்,'' என்றார்.

நீதிபதிகள்: மனுதாரர் தவறான தகவலுடன், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் மனு செய்துள்ளார். மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். தொகையை மதுரை காந்தி மியூசியத்திற்கு செலுத்த வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X