பொது செய்தி

தமிழ்நாடு

'குடில்' களாக சோதனை சாவடிகள் வேலை செய்யாத கண்காணிப்பு கேமரா

Added : ஜன 11, 2020
Advertisement
'குடில்' களாக சோதனை சாவடிகள் வேலை செய்யாத கண்காணிப்பு கேமரா

நாகர்கோவில்: கேரள எல்லையுடன் இணைந்துள்ள குமரி மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கம் அதிகம். ரேஷன் அரசி, மணல், மண்ணெண்ணெய், ஜல்லி பொடி போன்றவை கடத்தப் படுவதை தடுக்க போலீஸ் சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் போலீசாருக்கு எந்த அடிப்படை வசதியும் இருக்காது.

ரோட்டோர குடிசையை விட மோசமாக இருக்கும் ஒரு குடிலுக்குள் இருந்து பணிபுரிய வேண்டும். வருவாய்துறைக்கு உதவும் இதுபோன்ற சோதனை சாவடிகளுக்கு அரசு நிதி ஒதுக்கி கட்டடம் கட்டிக் கொடுப்பதில்லை. போலீசாரே இவற்றை கட்டிக்கொள்கின்றனர். கொலை நடந்த களியக்காவிளை சோதனை சாவடியின் நிலையும் இதுதான்.

இங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகியுள்ளது. மாவட்டத்தில் பல சோதனை சாவடிகளின் நிலை இப்படிதான் இருக்கிறது. சோதனை சாவடிகளில் பெரும்பாலும் ஒருவர் மட்டுமே பணியில் நியமிக்கப்படுகிறார். துப்பாக்கியும் கிடையாது. வாகனங்களை சோதனை செய்யும் போது தகராறு ஏற்படுவது வழக்கம். வேறு வழியில்லாமல் பணியாற்றி வருவதாக போலீசார் வேதனை தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்த அன்று வில்சன் மட்டுமே பணியில் இருந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சோதனை சாவடிகளில் இரண்டு போலீசாரை நியமிக்கவும், துப்பாக்கி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூரு மற்றும் டில்லியில் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகள் கைபற்றப்பட்டுள்ளன.இந்த குண்டுகளுடன், வில்சனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை ஒப்பிட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X