பொது செய்தி

தமிழ்நாடு

நாடு செழிக்க தினமலர் சார்பில் நன்மை தருவார் கோயிலில் கோ பூஜை

Added : ஜன 11, 2020
Advertisement
நாடு செழிக்க தினமலர் சார்பில் நன்மை தருவார் கோயிலில் கோ பூஜை

மதுரை: நாடு செழிக்கவும், வாசகர்களுக்காகவும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தினமலர் சார்பில் நேற்று காலை 10:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோ எனப்படும் பசுவில் தான் அனைத்து கடவுள்களும் இருப்பதாகவும், அதன் நான்கு கால்களும் நான்கு வேதங்களாக இருப்பதாகவும் ஐதீகம். எனவே பசுவிற்கு பூஜை செய்தால் அனைத்து கடவுளையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என முன்னோர் கூறியுள்ளனர்.

கோ சம்ரக் ஷணை என்ற பசு வழிபாட்டு முறைப்படி, ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் பூஜை நடத்தப்பட்டது. முதலில் கணபதி வழிபாட்டுக்கு பின், கோயிலுக்கு சொந்தமான காராம் பசுவையும், கன்றையும் நீராட்டி, வாலில் இருந்து தலைபகுதி வரை சந்தனம் குங்குமம் வைத்து, வஸ்திரம் சாத்தி, மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

பூக்களால் அர்ச்சனை செய்து, பொங்கல் மற்றும் பழங்கள் நைவேத்யம் செய்து, வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணபதி ராம் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X