தேசிய கைத்தறி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கைத்தறி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 11, 2020
Share

காஞ்சிபுரம் : மத்திய அரசின் தேசிய கைத்தறி விருதுகளை பெற, நெசவாளர் சேவை மையத்தில், நெசவாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணி நுால் துறை, சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய விருது, தேசிய நற்சான்றிதழ், கைத்தறி சங்கங்களுக்கு விற்பனைக்கான விருதுகள் என, பல்வேறு வகையான விருதுகளை, 2014ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.கடந்த, 2017 - 18 ம் ஆண்டுக்கான நெசவாளர் விருதுகளை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்நிலையில், 2018 - 19 ம் ஆண்டுக்கான விருதுகளை பெறுவதற்கான அறிவிப்புகளை, மத்திய அரசின் கைத்தறி துறை வெளியிட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்கள், மத்திய அரசின் கைத்தறி துறைக்கான தேசிய விருதுகளை பெற, காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X