சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : ஜன 11, 2020
Advertisement

காஞ்சிபுரம்: 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நிறுவனம், சேலம் சக்தி கைலாஷ் கல்லுாரி மற்றும் சேலம் மன நிறைவு மையம் ஆகியவை இணைந்து, சமுதாயத்துக்கு பயன் தரும் அறிவியல் செயல்திட்டம் சமர்ப்பித்தல் போட்டியை, சேலத்தில் நடத்தின.தமிழகம் முழுவதும், சி.பி.எஸ்.இ., மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 150 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், காஞ்சிபுரம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும், ரா.தருண் பிரசாத், மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். இதற்கு பரிசாக, தருண் பிரசாத்தை, மலேஷியா நாட்டில் நடைபெற உள்ள அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து செல்லப்படுகிறார்.அரசு பள்ளிக்கு இருக்கை அன்பளிப்பு

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, இருக்கைகள் நேற்று வழங்கப்பட்டன.அதே பள்ளி, பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 1.65 லட்சம் ரூபாய் செலவில், 50 செட் மேசை மற்றும் இருக்கை வழங்கினார்.திட்டப்பணிகள் ஆய்வு

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்துார் வட்டாரம், கொண்டமங்கலம், சிங்கபெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் பசுமை வீடுகள்; கால்நடைத் துறை சார்பில், பயனாளிகளுக்கு, ஆடு, மாடு, கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.அதேபோல், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு, 'அம்மா' இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.மேற்கண்ட திட்ட பணிகளை, தமிழக சிறப்பு திட்ட செயலாக்க இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.பண்ணைய விவசாயிகளுக்கு முகாம்

காஞ்சிபுரம்: கூட்டு பண்ணைய விவசாயிகளுக்கு, இயந்திரங்களை தேர்வு செய்யும் முகாம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை வேளாண் அலுவலகத்தில் நடந்த முகாமில், வேளாண் இணை இயக்குனர் அசோகன் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பல வட்டாரங்களைச் சேர்ந்த கூட்டு பண்ணைய விவசாயிகள், உழவு கருவிகளை தேர்வு செய்தனர்.இதில், 10க்கும் மேற்பட்ட உழவு கலப்பைகள் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தன. வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் கூட்டு பண்ணைய விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.மின்னழுத்த பிரச்னை தீர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை, சீயமங்கலம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில், சில நாட்களாகவே, குறைந்த மின்னழுத்தம் வருவதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்து வந்தனர்.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, மின் வாரிய அதிகாரிகள் வீடு வீடாக சென்று, மின்னழுத்தம் சீராக வருவதற்கு, தகுந்த நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளனர்.புகையில்லா போகி விழிப்புணர்வு

பாக்கம்: திருவள்ளூர் அடுத்த, கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவன வளாகத்தில் உள்ள மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து, இப்பள்ளி மாணவர்கள், நேற்று, விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, விளம்பர பதாகைகளை ஏந்தியபடி, முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.உத்திரமேரூர்: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, திருப்புலிவனம் அரசு பள்ளி மாணவ - மாணவியர், நேற்று, விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.சிலம்ப போட்டிக்கு 9 பேர் தேர்வு

கும்மிடிப்பூண்டி: புதுக்கோட்டை மாவட்டத்தில், 3 முதல் 5ம் தேதி வரை, மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.இதில், கும்மிடிப்பூண்டியில், பி.கே.முத்துராமலிங்கம் சிலம்ப கலைக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டம் சார்பில் பங்கேற்றனர். அவர்களில், ஆர்.ஜெகன், வி.மிதுன்சாய், எஸ்.இந்துமதி, எஸ்.ரூபினி உட்பட ஒன்பது பேர், மே மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்ப போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.நாளை திருக்கல்யாண வைபவம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பிராமணர் தெருவில் உள்ளது, அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில்.மார்கழி மாதம் நடைபெறும், சுவாமியின் திருக்கல்யாண வைபவம், நாளை மாலை, 6:00 மணிக்கு நடைபெறுகிறது.பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து படைப்பர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.மாணவியருக்கு எஸ்.பி., அறிவுரை

திருத்தணி: திருத்தணி காமராஜர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், பெண் பிள்ளைகள் பாதுகாப்பு கருத்தரங்கம், நேற்று நடந்தது. 300 மாணவியர் பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற, எஸ்.பி., அரவிந்தன் பேசியதாவது:மாணவியர், நேர்மையான சிந்தனைகளுடன் படிக்க வேண்டும். படிப்பு முடிந்ததும், எந்த துறையில் சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை நோக்கி பயணிக்க வேண்டும்.மாணவியருக்கு, காவல் துறை பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் உள்ளது.இஸ்ரோவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில், அதிகளவில் பெண்கள் தான் பணிபுரிகின்றனர். பெண் அறிவியல் விஞ்ஞானிகள், அதிகம் வரவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பெண்ணுக்கு ஆணையர் பரிசு

திருத்தணி: திருத்தணி, முதல் வார்டு செங்குந்தர் நகரில், பெரும்பாலான குடும்பத்தினர், குப்பை கழிவுகளை தரம் பிரித்து, துப்புரவாளர்களிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையல், ஆணையர் ராஜலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர், குப்பையை தரம் பிரித்து கொடுக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று, இல்லத்தரசிகளுக்கு டிபன் பாக்சை பரிசாக வழங்கி பாராட்டினர்.கோவில்களில் பால்குட விழா

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, சிறுதாவூர் கிராமத்தில், பாலாட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 36ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மனுக்கு, இருமுடி மாலை அணியும் பக்தர்கள், 108 பால் குடங்களை எடுத்தனர்.அதேபோல், பெரியவிப்பேடு சிவசங்கரி சமேத சதாசிவ சிவகிரிநாதர் கோவிலிலும், பால் குட விழா நடந்து. '18 வயதுக்கு பின் வாகனம் ஓட்டுங்கள்'

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, எம்.ஆர்.ஐ., நிறுவனம் சார்பில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் முகாம், தனியார் பள்ளியில், நேற்று நடந்தது.செங்கல்பட்டு எஸ்.பி., கண்ணன் பங்கேற்று, ''மாணவர்கள், 18 வயது முடிந்தவுடன், ஓட்டுனர் உரிமம் பெற்று, தலைகவசம் அணிந்து, வாகனங்கள் ஓட்டவேண்டும். ''பெற்றோர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப, மாணவர்கள் படித்து, வாழ்க்ககையில் முன்னேற வேண்டும்,''என்றார்.மாவட்ட பெயர் மாற்ற உத்தரவு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட, அரசு நிர்வாக செயல்பாடுகளின் பதிவில், புதிய மாவட்ட பெயர் மாற்றம் இடம்பெறாமல் இருப்பது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ், அரசு நிர்வாக செயல்பாடு பதிவு உள்ளிட்டவற்றில், காஞ்சிபுரம் மாவட்டம் என்பதை நீக்கி, செங்கல்பட்டு மாவட்டம் என இடம்பெற வேண்டும் என, அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தினார்.துறையினர், அலுவலக பெயர் பலகை, அறிவிப்பு உள்ளிட்டவற்றில், செங்கல்பட்டு மாவட்ட, 'ஸ்டிக்கர்' ஒட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X