பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் வரியில்..

Added : ஜன 11, 2020
Share
Advertisement
புகையில்லா போகிஉத்திரமேரூர்: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, திருப்புலிவனம் அரசு பள்ளி மாணவ - மாணவியர், நேற்று, விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.கோவில்களில் பால்குட விழாதிருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, சிறுதாவூர் கிராமத்தில், பாலாட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 36ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மேல்மருவத்துார்

புகையில்லா போகிஉத்திரமேரூர்: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, திருப்புலிவனம் அரசு பள்ளி மாணவ - மாணவியர், நேற்று, விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.கோவில்களில் பால்குட விழாதிருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, சிறுதாவூர் கிராமத்தில், பாலாட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 36ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மனுக்கு, இருமுடி மாலை அணியும் பக்தர்கள், 108 பால் குடங்களை எடுத்தனர்.

அதேபோல், பெரியவிப்பேடு சிவசங்கரி சமேத சதாசிவ சிவகிரிநாதர் கோவிலிலும், பால் குட விழா நடந்து. '18 வயதுக்கு பின் வாகனம் ஓட்டுங்கள்'செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, எம்.ஆர்.ஐ., நிறுவனம் சார்பில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் முகாம், தனியார் பள்ளியில், நேற்று நடந்தது.செங்கல்பட்டு எஸ்.பி., கண்ணன் பங்கேற்று, ''மாணவர்கள், 18 வயது முடிந்தவுடன், ஓட்டுனர் உரிமம் பெற்று, தலைகவசம் அணிந்து, வாகனங்கள் ஓட்டவேண்டும். பெற்றோர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப, மாணவர்கள் படித்து, வாழ்க்ககையில் முன்னேர வேண்டும்,''என்றார்.பெயர் மாற்ற உத்தரவு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட, அரசு நிர்வாக செயல்பாடுகளின் பதிவில், புதிய மாவட்ட பெயர் மாற்றம் இடம்பெறாமல் இருப்பது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ், அரசு நிர்வாக செயல்பாடு பதிவு உள்ளிட்டவற்றில், காஞ்சிபுரம் மாவட்டம் என்பதை நீக்கி, செங்கல்பட்டு மாவட்டம் என இடம்பெற வேண்டும் என, அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தினார். துறையினர், அலுவலக பெயர் பலகை, அறிவிப்பு உள்ளிட்டவற்றில், செங்கல்பட்டு மாவட்ட, 'ஸ்டிக்கர்' ஒட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X