பெண்ணை தாக்கிய இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை தாக்கிய இருவர் கைது

Added : ஜன 11, 2020

கம்மாபுரம்:கம்மாபுரம் அருகே மனை சம்பந்தமான தகராறில், பெண்ணை தாக்கிய, இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி பூவரசி, 25. இவர், கம்மாபுரம் அடுத்த சின்னகோட்டு முளை கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.பூவரசிக்கும், சின்னகோட்டுமுளை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலச்சந்திரன், 22; என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

கடந்த 7 ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில், பூவரசியை, பாலச்சந்திரன் ஆதரவாளர்கள் ஆபாசமாக திட்டி தாக்கினர். இது குறித்து புகாரின் பேரில், நான்கு பேர் மீது, கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, பாலச்சந்திரன்,22; சந்தோஷ்குமார், 21; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X