அரசு பஸ்சில் சிக்கி இரு மாணவர்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்சில் சிக்கி இரு மாணவர்கள் பலி

Added : ஜன 11, 2020
Share

ஸ்ரீபெரும்புதுார் : ஒரகடம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்துவிழுந்த இரு மாணவர்கள், அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி, பலியாகினர்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதி தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் பங்கேற்று, சென்னையைச் சேர்ந்த மாணவர் ரகமதுலா, 20, மாணவியர் லோஷினி, 20, அஷிதா, 18, ஆகியோர், 'டியோ' இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பினர்.வண்டலுார்- - வாலாஜாபாத் சாலை, ஒரகடம் மேம்பாலத்தை கடந்தபோது, முன்னால் சென்ற மினி வேன் மீது மோதாமல் இருக்க, ரகமதுலா, இருசக்கர வாகனத்தை திருப்பினார்.

ஆனால், எதிர்பாராமல், நிலை தடுமாறி, மூவரும் விழுந்தனர்.அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் சென்ற, தடம் எண்: '79' அரசு பஸ், ரகமதுலா மற்றும் லோஷினி மீது ஏறி இறங்கியது.சம்பவ இடத்திலேயே, இருவரும் பலியாகினர். அஷிதா, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து, ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X