பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் குழந்தைக்கு கல்வி வழங்க அறிவுரை

Added : ஜன 11, 2020
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக, செங்கல் சூளைகளில் பணிபுரிய, புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்தில், கலெக்டர் மகேஸ்வரி தலைமை வகித்து, அதிகாரிகளிடம் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் கணக்கெடுப்பு நடத்தி, அவர்களை மீட்டு, பள்ளியில் சேர்க்க வேண்டும்.சீருடை, நோட்டுப்புத்தகம், விலையில்லா பொருட்களை வழங்க, அதிகாரிகள் முன்னேற்பாட்டுடன் இருக்கு வேண்டும்.மதிய உணவு வழங்க, பள்ளிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மலர்கொடி, செங்கல் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கடந்த, 2018- - 19-ம் கல்வி ஆண்டில், 2,338 குழந்தைகள் மீட்கப்பட்டனர். நடப்பாண்டு கல்வியாண்டில், 2,500 குழந்தைகள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X