பொது செய்தி

தமிழ்நாடு

கொசு புழுக்களை அழிக்கும் பணி

Added : ஜன 11, 2020
Advertisement

கம்மாபுரம்:கம்மாபுரம் அடுத்த வி.சாத்தப்பாடி ஊராட்சியில், டெங்கு கொசு புழுக்களை அழிக்கும் பணி நடந்தது.

கம்மாபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தின் சார்பில், வி.சாத்தப்பாடி ஊராட்சியில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் முருகவேல், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், களப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் டெங்கு கொசு புழுக்களை அழிக்க டெமிபாஸ் மருந்து தெளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X