சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜன 11, 2020
Advertisement

இளம்பெண் மாயம்

செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த அயத்துார் கிராமத்தைச் சேர்ந்த, 19 வயது பெண், இருங்காட்டுக்கோட்டை பகுதியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவர், 8ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து, அந்த பெண்ணின் தந்தை புகாரை, செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.தகராறு செய்த வாலிபருக்கு சிறை

மணவாள நகர்: மணவாள நகர் அடுத்த, இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் பாலு, 39. நேற்று முன்தினம், வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு, வெளியே வந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் சுந்தர், 37, என்பவர், பாலுவை ஆபாசமாக பேசி, கத்தியால் தலை, நெற்றியில் வெட்டினார்.தொடர்ந்து, அங்கே இருந்த ராமலிங்கம் மகன் வெள்ளை என்பவரையும், சுந்தர் வெட்டினார்.இதையடுத்து, பாலு புகாரை விசாரித்த போலீசார், சுந்தரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.சூதாட்டம் ஆடிய நால்வர் கைது

மணவாள நகர்: மணவாள நகர் போலீசார், நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் ரோந்து சென்றனர்.அங்குள்ள சிறிய பாலம் அருகே, காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டருந்த நான்கு பேரை பிடித்தனர்.விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்தோர் என்பது தெரிந்தது. இதையடுத்து, 27 - 65 வயதுடைய நான்கு பேரையும், போலீசார் கைது செய்தனர்.மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, மங்களம் கிராம ஆரணி ஆற்றில் மணல் கடத்தி வந்த மினி லாரியை, அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த ஆரணி போலீசார் மடக்கினர்.போலீசாரை கண்டதும், ஓட்டுனர் தப்பி ஓடினார். லாரியை பறிமுதல் செய்த போலீசார், வாகன உரிமையாளரை தேடுகின்றனர்.மகள் சாவில் மர்மம் என புகார்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், சென்றாயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் தரணி, 19. கடந்தாண்டு, ஆனந்த் என்பவரை, பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்தார்.நேற்று காலை, தரணி இறந்து விட்டதாக, ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர், பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில், தன் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.விபத்தில் மீனவர் இறப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் அருகே, பீமுவார்பாளையம், மீனவ கிராமத்தில் வசித்தவர் குமரவேல், 24. அவரது நண்பர் குமரவேலன், 25.மீனவர்களான இருவரும், நேற்று முன்தினம், ஆரம்பாக்கத்தில் இருந்து எளாவூருக்கு, 'யமஹா எப்.இசட்' வாகனத்தில் சென்றனர்.ஆரம்பாக்கம் ரயில் நிலைய சாலை சந்திப்பு அருகே, முன்னால் சென்ற பயணியர் வேன் மீது, இருசக்கர வாகனம் மோதியது.மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குமரவேல் இறந்தார். குமரவேலன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X