பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Added : ஜன 11, 2020
Advertisement

சிதம்பரம்:சிதம்பரம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான இனிப்புகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்து வருகிறது. விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சிதம்பரம் நகர பகுதிகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில், அதிகாரிகள் அன்பழகன், நல்லதம்பி, சுப்ரமணியன், ரவிச்சந்திரன், சந்திரசேகர், ஏழுமலை ஆகியோர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் பஸ் நிலையம், கீழ வீதி, மேல வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்பு கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, காலாவதியான 50 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர்.மேலும் காலாவதியான குளிர் பானங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X