பொது செய்தி

தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 11, 2020
Advertisement

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 1 ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தினமும் கோயில் திருவாட்சி மண்டபத்தை மாணிக்கவாசகர் வலம் வந்தார். நேற்று முன் தினம் ராட்டின திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து தைல காப்பு சாத்துப்படியானது. உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து காப்பு கட்டப்பட்டு, நடராஜர் சிம்மாசனத்திலும், சிவகாமி அம்பாள் வெள்ளி அம்பாரியிலும் தனித்தனி பூச்சப்பரத்தில் கிரிவலம் சென்று அருள் பாலித்தனர்.திருநகர் சித்தி விநாயகர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு 36 திரவிய அபிஷேகம், பூஜை நடந்தது.மேலுார்மேலுார் சிவன் கோயிலில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது.நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிவனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தன. திருெவம்பாவை பாடப்பட்டதை தொடர்ந்து சிவாச்சார்யார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நடராஜர், சிவகாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பேரையூர்சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவகாமி, நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம், அராதனை, அலங்காரம் நடந்தது. சோழவந்தான்பிரளயநாதர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமியம்மனுக்கு சிறப்புஅபிஷேக, தீபாராதனை நடந்தது. தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயிலில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சப்பரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X