தமிழ்நாடு

கடினமான யோகாவை மிக எளிதாக செய்து காட்டி மாணவன்

Added : ஜன 11, 2020
Advertisement

கூடலுார்- கூடலுார் ஆர்.எஸ்.கே., நர்சரி பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் 8 வயது மாணவர் கவ்யன். தந்தை பெயின்டர் வேலை பார்த்து மிகுந்த சிரமத்துடன் இவரை படித்து வைத்துக் கொண்டிருக்கிறார்.பள்ளியில் கவ்யன், தனது வயதையும் தாண்டி மிகவும் கடினமான யோகாவை மிக எளிதாக செய்து காட்டினார். இதைப் பார்த்த தேனி மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவிராம், இந்த மாணவருக்கு சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறார்.பயிற்சியாளர் கூறியதாவது: கவ்யன் ,உலகளவில் செய்யக்கூடிய பல யோகாவை தற்போது செய்வது பாராட்டக்கூடியது. ஒரு நிமிடத்தில் 40 வகையான யோகாவை செய்து காட்டியுள்ளார். மேலும், மண்பானை, ஆணிப்படுக்கை, தண்ணீரில் மிதப்பதற்கு சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.இந்த மாணவருக்கு தனிக்கவனம் செலுத்தி பயிற்சி வழங்கி வருகிறேன். உலக அளவில் இவர் யோகாவில் சாதிப்பார். இவரை பள்ளி முதல்வர் பாலகார்த்திகா, நிர்வாகிகள், ஆசிரியர்கள் ,உற்சாகப்படுத்தி வருகின்றனர்,என்றார். மாணவரை ஊக்கப்படுத்த 97909 82100.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X