குத்துச்சண்டையில் பரிசுகளை குவிக்கும் மாணவி

Added : ஜன 11, 2020
Advertisement

போடிஎதிரிகளிடமிருந்து எந்த சூழ்நிலையிலும் தன்னை காத்து கொள்ள உதவுவது குத்துச்சண்டை. இப்போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை படைத்து வருகின்றனர். அதன் வரிசையில் குத்துச்சண்டையில் அசத்தும் போடி சி.பி.ஏ., கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவி ஏ.ஹேமலதா கூறியதாவது:சிறுவயதிலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது. அம்மா ஈஸ்வரி, அப்பா அழகுராஜா கூலி வேலை செய்து வந்தாலும் எனக்கு ஊக்கம் அளிக்கின்றனர். போடி வி.என்.பாக்சிங் அகடாமியின் மாஸ்டர்கள் நீலமேகம், கவுசல்யா வாஞ்சி ஆகியோர் மூலம் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றேன். குருவான மாஸ்டர்கள், கல்லுாரி முதல்வர், நிர்வாகம்,பேராசிரியர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். தொடர் பயிற்சியால் உடலுக்கு புத்துணர்ச்சி, ஆரோக்கியம், படிப்பதிலும் ஆர்வம் ஏற்படுகிறது. பள்ளியில் படித்தபோது குத்துச்சண்டை போட்டியில் மாவட்ட அளவில் 2 முறை முதலிடமும், மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று பதக்கம் வென்றேன். கடந்த ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் பெற்றேன். கடந்த நவம்பரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் 44 -- 46 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் வென்றுள்ளேன். இதனால் அகில இந்திய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளேன். குங்பூ, சிலம்பாட்டம், குத்துச்சண்டை போன்றவை பெண்கள் தங்களை காத்துக் கொள்ள பயன்படும் பெரிய ஆயுதமாகும். இவற்றில் பயிற்சி பெற்று வெற்றியடைந்தால் அரசு வேலைக்கும் வாய்ப்பு ஏற்படும். தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வெற்றி பெறுவதே எனது லட்சியம், என்றார். இவருக்கு சபாஷ் கூற 82488 72988.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X