பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தை 'ஹை-டெக்' ஆக மாற்ற நண்பர்கள் சபதம்

Added : ஜன 11, 2020
Advertisement

தேவாரம்:தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர்கள் திருமலைராஜ், சுரேஷ், ராஜேஷ்குமார். மூவரும் நண்பர்கள். கடந்த 1991ம் ஆண்டு முதல் 1995 வரை, இங்கு சவுடாம்பிகா ஆரம்ப பள்ளியில் ஒன்றாக படித்தனர். வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டாலும், நட்பை தொடர்கின்றனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், டி.ரெங்கநாதபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக மூவரும் தேர்வாகியுள்ளனர்.
இந்த ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளில் ஆண்கள், பெண்களுக்கு தலா மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று வார்டுகளையும் நண்பர்கள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.திருமலைராஜ் கூறியதாவது: பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு நம்மால் என்ன முடியுமோ, அதை செய்ய வேண்டுமென்பதற்காக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டோம். ஆயிரம் உறவுகள் இருந்தாலும், நண்பர்கள் என்ற உரிமை எப்போதும் மாறாதது. பரஸ்பரம் நண்பர்களின் வெற்றிக்காக ஒன்றுகூடி உழைத்தோம். மக்கள் நம்பிக்கை வைத்து எங்களை தேர்வு செய்துள்ளதால், டி.ரெங்கநாதபுரத்தை 'ஹை-டெக்' கிராமமாக மாற்றுவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளோம். முதலில் கிராமத்திற்கு தேவையான குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்.கிராமம் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதற்காக, அனைத்து தெரு சந்திப்புகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நுாறு பேர் மட்டுமே இங்குள்ளதால், அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தீர்மானித்துள்ளோம். இந்தியா வல்லரசாவது இளைஞர்கள் கைகளில் உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இணைந்த கைகளாக செயல்படுத்துவோம்,' என்றார்.நண்பர்களை வாழ்த்த: 97872 38555

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X