மாசற்ற பணியால் அரசின் நற்சான்று அர்ப்பணிப்புடன் அலுவலக காவலர்

Added : ஜன 11, 2020
Advertisement

தேனிஅரசு, தனியார்துறை பணியில் சேரும் வரை நேர்மை, கடமை, ஒழுக்கம் என கண்ணும் கருத்துமாக இருக்க நினைப்போம். பின்னர் காலப்போக்கில் சிலரின் நடவடிக்கையில் மாறுதலால் விமர்சனம் எழும். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எந்த மனநிலையில் அரசு பணிக்குள் நுழைந்தாரோ அதே போல இன்றும் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளின் பாராட்டு பெற்றுள்ளார் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட புள்ளியியல் துறை அலுவலக காவலர் நாகேந்திரன் 57.இவர் 1988 ல் மாதம் ரூ.70 சம்பளத்திற்கு தேனி வட்டார புள்ளியியல் துறை அலுவலகத்தில் காவலர் பணியில் சேர்ந்தார். பின்னர் அருப்புக்கோட்டை கோட்ட புள்ளியியல் அலுவலகத்தில் தினமும் ரூ.18 க்கு பணியில் சேர்ந்தார். செங்கல்பட்டில் பணி செய்த போது தினக்கூலி ரூ.50 ஆக உயர்ந்து மாதம் ரூ.1500 சம்பளமாக பெற்றார்.தேனி, மதுரை, மீண்டும் தேனி என 32 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூனில் ஓய்வு பெற உள்ளார். இன்னமும் உயரதிகாரிகள் கூறும் வேலையை முகம் சுளிக்காமல் பொறுமையாக செய்து முடிப்பார். யாரிடமும் பிரதிபலன் எதிர்பாராத, உரக்க பேசாத தன்மை கொண்டுள்ளார். வயது மூப்பில் இருந்தாலும் மளமளவென படி இறங்கி சென்று தட்டாமல் அலுவலக வேலை செய்து முடித்து வந்து பதில் தருவது இவரது சிறப்பு.இவரது சேவையை பாராட்டிய திருநெல்வேலி இணை இயக்குனர் ஹரிஹரதாஸ், இவரை பெருமைப்படுத்தும் வகையில் மாசற்ற பணியாற்றியவர் விருது வழங்க பரிந்துரை செய்தார். அதன்படி மாசற்ற பணியாளர் என அரசு சான்றிதழும், ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.அவர் கூறியதாவது:எனது சர்வீஸ் சான்றுகளில் எவ்வித குறைபாடு இன்றி சிறப்பாக வைத்துள்ளேன். எந்த அதிகாரியும் குறை கூறியது இல்லை. பணியில் நேர்மையாகவும், சிறப்பாக செய்வதற்கு மனைவிதான் காரணம். குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்தி இரு மகன்களை நன்கு படிக்க வைத்து பெருமைபடுத்தியுள்ளார். அவர்களின் முன்னேற்றத்திற்கு தினமலர் நாளிதழ் வழிகாட்டியது. மதுரையில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சி, ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் மகன்களுடன் நானும் ஆஜராகி வல்லுநர்கள் கூறிய கருத்தை கேட்டேன். அதன்படி பிள்ளைகளை வழிநடத்தினேன். இன்னும் ஒன்றரை ஆண்டு சிறப்பாக பணி செய்து ஓய்வு பெற்றால் முழுமையான மனநிறைவு ஏற்படும், என்றார். இவரை பாராட்ட 79896 95809

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X