தமிழ்நாடு

நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட பெண்கள்

Added : ஜன 11, 2020
Advertisement

மூணாறு, :சுற்றுலா நகரான மூணாறில் பெண்கள் இரவில் பயமின்றி உலா வரலாம் என்பதை உணர்த்தும் வகையில்,நள்ளிரவில் பெண்கள் நடந்தனர்.நள்ளிரவில் பெண்கள் தன்னந்தனியாக எப்போது நடமாட முடிகிறதோ, நாம் அன்று தான் முழுமையாக சுதந்திரம் பெற்றோம்' என மகாத்மா காந்தி கூறினார்.
அவரது சொற்களை மெய்ப்படுத்தும் வகையில், கேரளாவில் பெண்கள் நலத்துறை சார்பில், 'பயமின்றி முன்னே செல்லுதல்' என்ற திட்டத்தினை அரசு செயல்படுத்தியுள்ளது.அதன்படி மாநிலம் முழுவதும் ஆண்கள் துணையின்றி, பெண்கள் நள்ளிரவில் நடந்து செல்லும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.சுற்றுலா நகரான மூணாறில், இரவில் பெண்கள் பயமின்றி உலா வரலாம் என்பதை உணர்த்தும் வகையில்,பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டெப்போவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நடை பயணத்தை துவக்கினர். இப்பயணம் நள்ளிரவு 1:00 மணிக்கு, மூணாறு நகரில் நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X