தமிழ்நாடு

சின்னமனூர் ஒன்றிய அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதால் போலீசார் நடவடிக்கை

Added : ஜன 11, 2020
Advertisement

சின்னமனுார், சின்னமனுார் ஒன்றிய கவுன்சிலில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் சம பலத்தில் இருப்பதால் இன்று தலைவர், துணை தலைவர் தேர்தலை சுமூகமாக நடத்த அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர். பிரச்னையை தவிர்க்க கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சின்னமனுார் ஒன்றிய கவுன்சிலில் உள்ள 10 வார்டுகளில் தி.மு.க., 6 இடங்களையும், அ.தி.மு.க., 4 இடங்களையும் கைப்பற்றின. முதல் வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க., கவுன்சிலர் ஜெயந்தி, துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து அ.தி.மு.க.,வில் இணைந்தார். இதனால் இரு கட்சிகளும் தலா 5 கவுன்சிலர்களுடன் சம பலத்தில் உள்ளன. ஒரு கவுன்சிலர் அணி மாறியதால் தலைவர், துணை தலைவர் பதவிகளை எளிதில் கைப்பற்றும் வாய்ப்பை தி.மு.க., இழந்து விட்டது. 'கடந்த 6ம் தேதி கவுன்சிலர்கள் பதவியேற்பின் போது, சின்னமனுார் ஒன்றிய அலுவலகத்தில் பிரச்னை ஏற்பட்டது. இன்று மறைமுக தேர்தலின் போது பிரச்னைக்கு வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்,' என போலீசார் தெரிவித்தனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் கூறுகையில், ''தேர்தல் ஆணைய விதிமுறைப்படி மறைமுக தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம். தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் ஒன்றிய அலுவலகம், துணை தலைவர் தேர்தல் நடைபெறும் ஊராட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X