ரோட்டை சீரமைப்பது எப்போது

Added : ஜன 11, 2020
Advertisement

கூடலுார், கூடலுாரில் இருந்து காஞ்சிமரத்துறை செல்லும் ரோட்டை சீரமைப்பதில், கம்பம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூடலுார் நகராட்சிக்கு இடையே உள்ள பிரச்னை காரணமாக தாமதமாகி வருகிறது.கூடலுாரில் இருந்து 9 கி.மீ., துாரமுள்ள காஞ்சிமரத்துறை ரோடு பல மாதங்களாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வெட்டுக்காடு, ஊமையன்தொழு, காஞ்சிமரத்துறை, பளியன்குடி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வழியாக செல்ல வேண்டும். மேலும், கூடுதலாக விவசாய நிலங்கள் உள்ள இப்பகுதியில் விளைபொருட்களை ஏற்றி வரும் இந்த ரோடு முக்கியமானதாகும். பல மாதங்களாக இந்த ரோடு பராமரிப்பின்றி சேதமடைந்துவிட்டது. விளைபொருட்களை ஏற்றி வரமுடியவில்லை. அவசர சிகிச்சைக்காக இந்த ரோட்டில் நோயாளிகள் விரைவாக செல்ல முடியவதில்லை.உடனடியாக ரோடு சீரமைக்க வலியுறுத்தி மக்கள் இரண்டு மாதத்திற்கு முன் மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் விவசாய சங்கத்தினர் இந்த ரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். மேலும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூடலுார் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.இருந்தபோதிலும் இதுவரை ரோடு சீரமைக்கவில்லை. கம்பம் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ரோடு இருந்தாலும், கூடலுார் நகராட்சிப்பகுதியில் இருப்பதால் இதனை யார் சீரமைப்பதில் என்ற குழப்பத்தால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கலெக்டர் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வுகண்டு ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X