மனவளர்ச்சி குன்றியோருக்குஇலவச தொழிற்பயிற்சி| Dinamalar

தமிழ்நாடு

மனவளர்ச்சி குன்றியோருக்குஇலவச தொழிற்பயிற்சி

Added : ஜன 11, 2020

திண்டுக்கல், திண்டுக்கல்லில் மனவளர்ச்சி குன்றியோர் தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இம்மையத்தில் தொழிற்பயிற்சி அளிப்பதுடன், இலவச உணவுடன், தங்கும் வசதி செய்து கொடுக்கப்படு கிறது.திண்டுக்கல் கூட்டுறவு நகரில் அம்மா இல்லம், நிலக்கோட்டை முருகதுாரான்பட்டியில் புதுவிடியல், திரவியம் நகரில் இனிய உதயம் ஆகிய இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சேர விரும்புவோர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0451-2460099 ல் பேசலாம் என, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X