சம்பா பயிரில் நோய் தாக்குதல்

Added : ஜன 11, 2020
Advertisement
 சம்பா பயிரில் நோய் தாக்குதல்

புவனகிரி:கீரப்பாளையம் சுற்றுபகுதியில் சம்பா பயிரில் கழுத்து குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வடக்கு பூதங்குடி, தெற்கு பூதங்குடி வாய்க்கால் வழியாக பாசனம் பெறும் கீரப்பாளையம், செட்டிமேடு, எண்ணெய் நகரம், கரைமேடு, திருப்பணிநத்தம், சிலுவைபுரம், வயலுார் மற்றும் மேல மூங்கிலடி சுற்று பகுதியில் விவசாயிகள் சம்பா நடவு மேற்கொண்டனர். சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்ட சம்பா பயிர்களில் கதிர் வந்த நிலையில், புகையான் தாக்குதல் மற்றும் கழுத்து குலை நொய் தாக்குதல் அதிகரித்துள்ளதுடன், நெல் மணிகள் எல்லாம் பதர்களாக இருப்பதால், கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் செலவு செய்த தொகையாவது கிடைக்குமா என வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து முன்னோடி விவசாயி கீரப்பாளையம் பிரசாத் கூறுகையில், 'கால நிலை மாற்றத்தால் சம்பா வயல்களில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலால் 70 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரம் விலை, உழவு, ஆள் கூலி என, அதிக செலவு செய்த விவசாயிகள், பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியுமா என்ற வேதனையில் உள்ளனர்.நோய் தாக்குதல் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் உரிய ஆலோசனை வழங்க வில்லை. பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X