பொது செய்தி

தமிழ்நாடு

பனிப்பொழிவால் மீண்டும் துளிர்க்கும் கொத்தமல்லி : * பனிப்பொழிவால் விவசாயிகள் நம்பிக்கை

Added : ஜன 11, 2020
Advertisement

கன்னிவாடி :வட்டப்பாறை பகுதியில் மீண்டும் துளிர்க்கும் கொத்தமல்லி சாகுபடிக்கு, சமீபத்திய பனிப்பொழிவு சாதகமாக இருக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.கன்னிவாடி அருகே தருமத்துப்பட்டி, கரிசல்பட்டி, வட்டப்பாறை, கசவனம்பட்டி, அலவாச்சிபட்டி, மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி பகுதியில், முன்பெல்லாம் கொத்தமல்லி, சுண்டல் சாகுபடி அதிகளவில் நடந்தது. சில ஆண்டுகளாக, தண்ணீர், மாறுபட்ட வெயிலின் தாக்கம், பனிப்பொழிவின் மாற்றங்களால், எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. இதையடுத்து, பூ, துளசி, மக்காச்சோளம் என சாகுபடி பயிர்களை மாற்றினர்.கடந்த 2 ஆண்டுகளாக, படைப்புழு தாக்கத்தால் மக்காச்சோள சாகுபடி மகசூலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சில விவசாயிகள் மீண்டும் சுண்டல், கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்திய பனிப்பொழிவு அதிகரிப்பின் தாக்கம், கொத்தமல்லி சாகுபடியில் பலனளிக்கும் வகையில் இருக்கும் என, விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X