பொது செய்தி

தமிழ்நாடு

திரும்பிப் பார்க்க வைக்கிறார் நல்லசாமி

Added : ஜன 11, 2020
Share
Advertisement

-வேடசந்தூர்: ஒவ்வொரு மனிதனும் வாழும் காலத்தில் தான் எத்தனை பேருக்கு பயன்பட்டோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்ததால், கல்வார்பட்டி ஊராட்சியையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கிறார் நல்லசாமி.இவரது பெற்றோர் பெரியசாமி, செல்லம்மாள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கல்வார்பட்டியில் குடியேறினர். நல்லசாமியோ சென்னை சென்று தொழில் செய்து படிப்படியாக முன்னேறினார்.தாயார் செல்லம்மாள் இறந்துவிட, கல்வார்பட்டியில் வசிக்கும் தந்தை, விவசாயம், வியாபாரத்தை கவனித் தார். பொது மக்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் ஏதாவது செய்ய விரும்பி, தாயார் பெயரில் டிரஸ்ட் துவங்கினார்.இதன்மூலம் ஆண்டுதோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகிறார். காசிப்பாளையம் ரெங்கநாதபுரம், கல்வார்பட்டி, வெள்ளையம்பட்டி என 7 அரசுப்பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு இலவச நோட்டு, எழுதுபொருட்களை வழங்குகிறார். 1,200 மரக்கன்றுகளை நட்டு பராமரிக் கிறார்.ஒரு கம்ப்யூட்டர் மையத்தை துவக்கி 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கிறார். அவர்களின் வாசிப்பு திறன் வளர்க்க நுாலகம் துவக்கினார். ஆங்கிலவழிக் கல்வி புத்தகங்கள், சிறுகதைகள், அறிஞர்களின் நூல்கள், போட்டித் தேர்வு பயிற்சி புத்தகங்கள், சமையல் புத்தகங்கள், இயற்கை மருத்துவங்கள் என எல்லாமும் உண்டு.தட்டச்சுப் பயிற்சி வகுப்பு நடத்த தனி அலுவலகம் ஏற்படுத்தி 2 ஆசிரியர்களை நியமித்துள்ளார். அங்கு மாணவர்கள் இலவசமாக எத்தனை ஜெராக்ஸ் பிரதிகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.சேவை குறித்து நல்லசாமி கூறுகையில், ''எனது தாயார் நினைவாக மக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தேன். பள்ளி குழந்தைகள், முதியோர் என அனைவருக்கும் சேவையாற்றுவதில் நிறைவாக உள்ளது, என்றார். இவரை பாராட்ட 98423 33941ல் பேசலாம்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X