பொது செய்தி

தமிழ்நாடு

வேடசந்தூரில் நெருக்கடி தீர களப்பணியில் போலீசார் தினமலர் செய்தி எதிரொலியால்

Added : ஜன 11, 2020
Advertisement

வேடசந்துார்,:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வேடசந்துார் நகரில் நெருக்கடியை தீர்க்க போக்குவரத்து போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.வேடசந்துாரில் காலை, மாலை நேரங்களில் வடமதுரை ரோடு, ஆத்துமேடு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பயணிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலதரப்பினரும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதே இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை மறித்து ஆய்வு மேற்கொள்வதை மட்டுமே கவனிக்கின்றனர் என நேற்று முன்தினம் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி., இளவரசன் போக்குவரத்து போலீசாரை நகரின் நெருக்கடி தீர வழிகாணுமாறு உத்தரவிட்டார். காலை, மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்ட், மகளிர் பள்ளி, ஆத்துமேடு பகுதிகளில் நின்று போக்குவரத்து பணியை கவனிக்க வேண்டும். விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெருக்கடி தீர பணியாற்றி வருகின்றனர். போலீஸ் கவனம் வேறுபகுதிக்கு திரும்பினால் மீண்டும் நெருக்கடி உருவாகும் என்பதால், இப்பணி தொய்வின்றி தொடர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X