பொது செய்தி

தமிழ்நாடு

சங்குகளில் பெயர் எழுதி வரும் ஜாபர்

Added : ஜன 11, 2020
Advertisement

-கொடைக்கானல்- முத்துக்குளிக்கு பெயர் போன தூத்துக்குடியில் கடற்சங்குகளை வாங்கி, குளுகுளு கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா வரும் பயணிகளின் பெயர்களை எழுதித் தருகிறார் ஜாபர் 37.இவற்றை டேபிள் வெயிட்டாகவோ, சாவிக் கொத்தாகவோ பயன்படுத்தலாம். காதலர்கள் பரிசாக வழங்கலாம். காரணம் அந்தளவு நேர்த்தியான வேலைப்பாடுடன் இச்சங்குகள் உள்ளன. இது குறித்து ஜாபர் கூறியதாவது:தூத்துக்குடியில் இருந்து டைகர் கவுடே, புற கவுடே, வெரஞ்சான், பீ சோவி, உட்டன் கீ செயின்கள், டேபிள் வெயிட்டாக பயன்படும் சங்குகளை ஆர்டர் செய்து கொடைக்கானலுக்கு வரவழைக்கிறேன். சுற்றுலா நகருக்கு வரும் பல்வேறு மாநிலத்தவரும் தங்களது பெயர் சங்கில் எழுதிக் கேட்டு பெற்று மகிழ்கின்றனர்.விழா, பிறந்த நாள், பெயர்களை எழுதல், காதலர்களை மகிழ்விக்கும் நினைவு சங்கு என பல்வேறு வகை உண்டு. ஒரே அரிசியில் பலரது பெயர் எழுதி, அதனை ரசாயனம் நிரம்பிய கண்ணாடி குப்பியில் போட்டால், எழுத்துக்கள் அத்தனை பளிச்சென தெரியும். அதனையும் கீ செயினாக தரும்படி பலரும் விரும்பி கேட்கின்றனர், என்றார். சுற்றுலா நகரில் முத்தான பெயர் பதிக்க 91594 35462 ல் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X