பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: போக்குவரத்து மாற்றம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:பொங்கல் பண்டிகையொட்டி, போக்குவரத்து வழித்தடத்தை மாநகர போலீசார் மாற்றம் செய்துள்ளனர். சில நாட்களே உள்ள நிலையில், தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கான பணியில் போலீசார், மாநகராட்சியினர் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்தும், போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்தும் மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.l திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ், அங்கேரிபாளையம் ரோடு சிவன் தியேட்டர் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அமைந்துள்ள மைதானத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் நிற்கும். கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மன்னார்குடி, அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், சிதம்பரம், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைபூண்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.l மதுரை மற்றும் திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ், அனைத்தும் வழக்கமாக புதிய பஸ் ஸ்டாண்டிலேயே செயல்படும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகாசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி.l கோவை மார்க்கமாக செல்லும் பஸ், பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது. கோவை, அவிநாசி, மேட்டுப்பாளையம், நீலகிரி, கோத்தகிரி செல்லும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.l ஈரோடு, சேலம் மார்க்கமாக செல்லும் பஸ் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் வெளியில் வரும் இடமான ரவுண்டானாவிற்கு அருகில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது. ஈரோடு, சேலம் ஆகிய வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.தீபாவளி பண்டிகையின் போது, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள மைதானத்தில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ் நின்று சென்றது. தற்போது, பொங்கல் பண்டிகைக்காக தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கான பணியை விரைந்து மேற்கொள்ளாமல், மாநகராட்சி மற்றும் போலீசார் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர். மைதானத்தில் குவிந்து கிடக்கும் குப்பை அகற்றப்படாமல், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இருதுறைகளை சேர்ந்த அதிகாரிகளும் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X