பொது செய்தி

தமிழ்நாடு

மாயமான மாணவனை மீட்ட 'வாட்ஸ் ஆப்'

Added : ஜன 11, 2020
Advertisement

வேடசந்துார், :பள்ளிக்கு சென்று காணாமல் போன மாணவனை, 'வாட்ஸ் ஆப்' தகவலால் கண்டுபிடித்தனர்.வேடசந்துார் அருகே பள்ளிக்கூடத்தான் புதுார் சண்முகம் மகன் சுரேந்தர் 12. இவர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 8-ந்தேதி பள்ளிக்கு சென்றவர், காலையிலேயே வீடு திரும்பி விட்டார். இதனால் 9-ந் தேதி பள்ளி செல்லுமாறு பெற்றோர் அனுப்பினர்.க்ஷமாணவர் சுரேந்தரோ, 'சொல்லாமல் லீவு போட்டதால், ஆசிரியர் திட்டுவார்' எனக் கருதி, அவ்வழியே வந்த டவுன் பஸ்சில் ஏறி கோவிலுருக்கு சென்றுவிட்டார். மாலையில் மகன் வீட்டுக்கு வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து இளைஞர்கள் சிலர் 'வாட்ஸ் ஆப்'களில் தகவலை பரப்பினர்.இதைப்பார்த்த கோவிலுாரைச் சேர்ந்த ஒருவர், 'மாணவன் சுரேந்தர், கோவிலுார் பகுதியில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நேற்று காலை அங்கு சென்று, சுரேந்தரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X