பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்: முகவரி சரிபார்க்க அழைப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

திருப்பூர்:இன்றும், நாளையும் நடக்கும் சிறப்பு முகாமில், வாக்காளர் ஒவ்வொருவரும், தங்களது விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக, இன்றும், நாளையும் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை, சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாக்காளர்கள், கட்டாயம் பள்ளிக்கு சென்று, தங்களது குடும்ப வாக்காளர் விவரம், முகவரி ஆகியவை சரிவர இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.புதிய 'சாப்ட்வேர்' பயன்படுத்தியதால், பெரும்பாலான வாக்காளரின் முகவரிகள் தாறுமாறாக மாறிப்போயுள்ளன. இதனால், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதிலும் குளறுபடி ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, ஒவ்வொரு வாக்காளரும், தங்களது குடும்ப உறுப்பினர்களின், விவரம், முகவரி ஆகியவை சரியாக இடம் பெற்றுள்ளதை, நேரில் சென்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.புதிதாக பெயர் சேர்க்க, படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய, படிவம்-7, திருத்தம் செய்ய படிவம் -8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, படிவம் -8 ஏ ஆகியவற்றில், தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், 'voter helpline' என்ற மொபைல் ஆப் மூலமாகவும், இத்தகைய சேவையை பெறலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாக்காளர் தங்களது விவரத்தை சரிபார்ப்பதுடன், திருத்தங்களும் செய்து கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X