தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கிஓட்டு சேகரித்த ஆளுங்கட்சி தி.மு.க., எதிர்ப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

திண்டுக்கல், :திண்டுக்கல்லில் ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பொங்கல் பரிசு வழங்குவதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஜன.9 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், முன்னாள் கவுன்சிலர் பலர் ரேஷன் கடைகளுக்கு சென்று தாங்களே வழங்குவது போல் பொங்கல் பரிசை மக்களுக்கு முன்னின்று வழங்கி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ரேஷன் கடையில் தகராறுநேற்று திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்., பட்டி ரேஷன் கடையில் அ.தி.மு.க.,வை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் (மாநகராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது) பொங்கல் பரிசையும், ரூ.1000 மும் வழங்கி, 'மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்கள்' என பிரசாரம் செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து அங்கே சென்ற தி.மு.க.,வினர், ஆளுங்கட்சியினர் ரேஷன் கடையை விட்டு உடனே வெளியேற வேண்டும். கடை ஊழியர்களே பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என, வாக்குவாதம் செய்தனர். இதனால் பொங்கல் பரிசு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே நடந்த வார்த்தை போரால் பொதுமக்கள் வெயிலில் காத்திருந்தனர். கட்சியினர் கலைந்து சென்ற பின், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X