சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமதுரையில் இளம்பெண் வெட்டிக்கொலை

Added : ஜன 11, 2020
Advertisement

வடமதுரை வடமதுரை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட் டார். வடமதுரை அருகே கம்பிளியம்பட்டி நிலப்பட்டியை சேர்ந்த பிச்சைமணி மகள் திவ்யபாரதி 22. இவருக்கு 16 வயதிலேயே பக்கத்து கிராமமான புதுாரை சேர்ந்த ஜெயக்குமாருடன் திருமணம் நடந்து, தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.திவ்யபாரதியின் நடத்தை தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவர் ஜெயக்குமார் ஓராண்டாக விழுப்புரத்தில் தனியே வசிக்கிறார். கணவரை பிரிந்த திவ்யபாரதி தனது தாயார் ஜெயமணியுடன் தங்கி குழந்தைகளை வளர்த்து வந்தார்.நேற்று முன்தினம் தாயார் ஜெயமணி வேடசந்துார் மில்லிற்கு இரவு நேர பணிக்கு சென்றபின், திவ்யபாரதி குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து ஒன்றரை கி.மீ., துாரத்தில் கூத்தம்பட்டி - பொத்தகணவாய்பட்டி இடையே தரிசு நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அவரது முகத்தில் வெட்டு காயங்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்ததால் நகைக்காக கொலை செய்யப்படவில்லை. கள்ளக்காதல் பிரச்னையில் கொலை நடத்திருக்கலாம் என்ற கோணத்தில் வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X