பொது செய்தி

தமிழ்நாடு

'குழந்தைக்கு 'டோன்ட் டச்' சொல்லி கொடுங்க!' கருத்தரங்கில் விழிப்புணர்வு

Added : ஜன 11, 2020
Advertisement

திருப்பூர்:பெண்களுக்கான தேசிய ஆணையம் சார்பில், 'பெண்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு, காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் குழந்தை தெரசா முன்னிலை வைத்தார். கூடுதல் எஸ்.பி., குணசேகரன் சிறப்புரை வழங்கினர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீவித்யா பேசுகையில், ''மகளிர் தினத்தை கொண்டாடும் நாம் மகளிரை கொண்டாடுவதில்லை. பெண்களின் அழகு என்பது அவள் உடையிலும் முகத்திலும் இல்லை. பேச்சிலும், அதன் கருத்திலும் உள்ளது. பெண்சுதந்திரம் ஆண்களை போல ஆடை அணிவதில் இல்லை. திறமைகளில் அவர்களுக்கு சமமானவர்கள் என்பதில் நிரூபிப்பதில் உள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், வக்கீல் ஸ்ரீராதா பேசியதாவது:பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் உள்ளன. இலவச சட்ட உதவி மையம் எப்போதும் உதவ தயாராக உள்ளது. ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்பு பெண்களுக்கு வழங்க வேண்டும் என சட்ட பிரிவு 19-20 எடுத்துரைக்கிறது.
வரதட்சணை கேட்டாலும், கொடுத்தாலும் குற்றம்.பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிறு வயதில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு, 'குட் டச்... பேட் டச்' சொல்லித்தர வேண்டாம்; 'டோன்ட் டச்' என சொல்லிக்கொடுங்கள். கல்லுாரியில் படிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால், பெண்கள் எந்த துறையிலும் சாதிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X