பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விவாத மேடை: கல்லூரி மாணவருக்கு அழைப்பு

Added : ஜன 11, 2020
Advertisement
 சாலை பாதுகாப்பு விவாத மேடை: கல்லூரி மாணவருக்கு அழைப்பு

பல்லடம்:வாகன விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருப்பூர் மாவட்ட வட்டார போக்கு வரத்து அலுவலர்கள், நுாதன முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதற்காக, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் விவாத மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, பல்லடம் வனாலயம் வளாகத்தில் நடந்தது.திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ.,க்கள் குமார், முருகானந்தம் தலைமையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு, வனம் அமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சாலை பாதுகாப்பில் பெரும் பங்கு வகிப்பது ஓட்டுநர்களே என்று ஒரு குழுவும், பிற சாலை உபயோகிப்பாளர்களே என்று மற்றொரு குழுவும் விவாத மேடை நிகழ்த்தினர்.ஆர்.டி.ஓ.,க்கள் கூறுகையில், 'சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விவாத மேடை நிகழ்ச்சி இன்று, பல்லடம் வனாலயம் வளாகத்தில் நடக்கவுள்ளது. அதில், திருப்பூர் மாவட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். விவாத மேடையுடன், மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X