சுகாதார ஊழியரை மிரட்டிய கும்பல் மீது போலீசில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுகாதார ஊழியரை மிரட்டிய கும்பல் மீது போலீசில் புகார்

Added : ஜன 11, 2020

திருப்பூர்:டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்களை மிரட்டிய கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மாநகராட்சி முழுவதும் பகுதிவாரியாக, டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஊழியர்கள் குழுக்களாக ஈடுபட்டுள்ளனர். வார்டுவாரியாக, வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்தல், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்; பாதுகாப்பு வழிமுறை குறித்த துண்டு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொள்கின்றனர்.மண்ணரை, பாவடிக்கல் வீதியில் பெண் ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் மது போதையில் வந்து அப்பெண் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தகராறு செய்தனர். இதுகுறித்து, கேட்ட ஊழியர்களையும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் குறித்து அந்த ஊழியர்கள் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X