சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் மயங்கி விழுந்து பலி

Added : ஜன 11, 2020
Advertisement

செம்பட்டி :சித்தையன் கோட்டையில் பொங்கல் பரிசுத்தொகை வாங்கிய முதியவர், ரேஷன்கடை அருகிலேயே மயங்கி விழுந்து பலியானார்.ரேஷன்கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. சித்தையன்கோட்டை 2ம் எண் ரேஷன்கடையில், நேற்று பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது. அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் 64, இங்கு காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தார். வினியோகம் தாமதமானதால் களைப்படைந்தார். தொகுப்பை வாங்கியபின், சைக்கிளை எடுக்க முயன்றபோது மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். தாமதமாக வந்த வாகனம், அவர் இறந்தது தெரிந்ததும் வழியிலேயே திரும்பியதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியினர் கூறுகையில், ''ஏற்பாடுகளில் கவனக்குறைவால், பலர் மயங்குகின்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. முதலுதவிகூட கிடைக்காமல், பெருமாள் பரிதாபமாக இறந்துள்ளார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X