கோயில் வளாகத்தில் நிழற்கூரை அமைக்கும் பணி இழுபறி

Added : ஜன 11, 2020
Advertisement

வடமதுரை :வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் நிழற்கூரை அமைக்கும் பணி 5 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 13 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்காக கோயில் வளாகம், சன்னதி வீதியில் தென்னங்கீற்றால் நிழற்கூரை அமைக்கப்பட்டது. விபத்துக்களை தவிர்க்க அரசு தென்னங்கீற்று கூரையை தவிர்க்கும் நோக்கில் முதன்முறையாக கடந்தாண்டு திருவிழாவில் இரும்பு தகரத்திலான தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டது.கோயில் வளாகத்திற்குள் பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதிகளின் முகப்பு பகுதியில் 5000 சதுர அடிக்கு நிரந்தரமாக இரும்பு கட்டமைப்பிலான கூடாரத்தை அமைத்து, குளிர் தன்மை தரும் நிழற்கூரையை அமைக்க உள்ளூர் பிரமுகர்கள் முயற்சி எடுத்தனர். இதன் பலனாக ஊர்மக்கள் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்கூரை பணி கடந்த 2015ல் துவங்கியது.இதற்கான இரும்பு துாண்கள் நிறுவப்பட்டு, இரும்பு குழாயிலான தளவாடப் பொருட்கள் தயாரித்து கோயிலுக்குள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. அதன்பின் ஐந்து ஆண்டுகளாகியும் நிர்வாக ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் மழை, வெயில் நேரங்களில் பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, விரைவில் நிர்வாக ஒப்புதல் தந்து பணியை முடிக்க இந்துசமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X