பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் வழித்தடம் நீட்டிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement
 அரசு பஸ் வழித்தடம் நீட்டிப்பு

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் வழித்தடங்களை நீட்டித்து, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

விருத்தாசலத்தில் இருந்து மாளிகைமேடு செல்லும் தடம் எண் 7 அரசு பஸ்சை ஏ.மரூர் வரையும், தடம் எண் 26 பஸ்சை பா.கொத்தனுார் வரையும், விருத்தாசலம் - நல்லுார் அரசு பஸ்சை இலங்கியனுார் வரையும் நீட்டிக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, எம்.எல்.ஏ., வின் கோரிக்கை ஏற்கப்பட்டு, டவுன் பஸ்கள் வழித்தடம் நீட்டிக்கப் பட்டது. இதற்கான நிகழ்ச்சி விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ஏ.மரூர், பா.கொத்தனுார், இலங்கியனுார் ஆகிய கிராமங்களுக்கு நேற்று முதல் புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது.

கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கொடியசைத்து, பஸ்களை இயக்கி வைத்தார். போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் (வணிகம்) சுந்தரம், கிளை மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி, அ.தி.மு.க., நிர்வாகிகள் செல்வராஜ், ரவி, நடராஜன், காமராஜ், ஜெயசங்கர், அரப்ஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X