பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளே, நாட்டில் செல்வத்தின் அடை யாளம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

கால்நடைகளே, நாட்டில் செல்வத்தின் அடை யாளமாக திகழ்ந்தன. மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவது தான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர் கூறுகின்றனர். பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, “வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு “அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே!தன்னுடைய பெருமையை பறைசாற்றும் வகையில் தன்னுடைய மாட்டை ஊர் மந்தையில் விட்டு ஊர் மக்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு.
இன்று மாடும் அந்த மாட்டை வளர்ப்பவரும் மாட்டைப் பிடிப்பவரும் என, எல்லோரும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணரும் நாளாக இருக்கும். இதற்கு மாடுபிடி, ஜல்லிக்கட்டு என்று பல பெயர்கள் இருந்தாலும் நம்முடைய பண்டைய காலத்தில் முன்னோர்கள் இந்த விளையாட்டை ஏறு தழுவுதல் என்று தான் குறிப்பிட்டார்கள். இன்று மாவட்டந்தோறும் ஜல்லிக்கட்டு திருவிழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X