தமிழ்நாடு

இறுதியாட்டம்! இன்று நடக்குது மறைமுக தேர்தல்:வீடியோ பதிவு செய்ய உத்தரவு

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020
Advertisement
 இறுதியாட்டம்! இன்று நடக்குது மறைமுக தேர்தல்:வீடியோ பதிவு செய்ய உத்தரவு

திருப்பூர்:மாவட்டம் மற்றும், ஊராட்சி ஒன்றியங்களின் குழு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல், இன்று நடக்கிறது. ஓட்டுச்சீட்டுகளுடன், அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.திருப்பூர் மாவட்ட ஊராட்சியில், 17 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி, எஸ்.சி., பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., 13 வார்டுகளை கைப்பற்றியுள்ளதால், தலைவர், துணை தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றும் நிலை உள்ளது. அ.தி.மு.க., சார்பில், யார் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்ற விவரம், இன்று தெரியவரும்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில், தலைவர் தேர்தல் காலை, 11:00 மணிக்கும், துணை தலைவர் தேர்தல், மாலை, 3:00 மணிக்கும் நடக்கிறது. இதேபோல், 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது.
உள்ளாட்சி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:காலை, 11:00 மணிக்கு, மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. கவுன்சிலர்களின், முன்மொழிவு, வழிமொழிவுடன், வேட்பாளர் மனு தாக்கல் செய்வார். போட்டியில்லாதபட்சத்தில், வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்படும்.காத்திருப்பு அவகாசம், 30 நிமிடம் கடைபிடிக்கப்படும். அதாவது, காலை, 11:00 முதல், 11:30 மணி வரை, வேட்புமனு தாக்கல் செய்து காத்திருப்பர்.
போட்டி இருப்பின், அதற்கு பிறகு, ஓட்டுப்பதிவு நடக்கும். வேட்பாளரின் வார்டு எண், பெயர் விவரம் எழுதி, தேர்தல் நடத்தும் அலுவலர் கையொப்பமிட்ட ஓட்டுச்சீட்டு வழங்கப்படும். அனைத்து கவுன்சிலர்களும், 'டிக்' செய்வதன் மூலம் ஓட்டளித்து, பெட்டியில் போடுவார்கள்.அதிக ஓட்டுக்களை பெறும் கவுன்சிலர், தலைவராக அல்லது துணை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக, 'மினிட்' புத்தகத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வீடியோ பதிவு அவசியம்மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு தலைவர் பதவிகளை கைப்பற்ற, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று நடக்க உள்ள, மறைமுக தேர்தலுக்கு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை:ஊராட்சி, ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான, மறைமுக தேர்தல் நடவடிக்கை முழுவதும், வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.மறைமுக தேர்தல் நடக்கும், கலெக்டர் அலுவலகம், ஒன்றிய அலுவலகங்களுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடக்கும் கூட்டரங்கில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நீங்கலாக, மற்றவர்கள் 'மொபைல்' போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. ஆபத்தை விளைவிக்கும் ஆயுதம், பேனா உள்ளிட்ட உபகரணங்களை, எடுத்து வரவும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X