பொது செய்தி

தமிழ்நாடு

படகு, வலையுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement
 படகு, வலையுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்:மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, படகு மற்றும் வலையுடன் மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், கடலுார் கார் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மண்டல் கமிஷன், பரிந்துரையின்படி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். 2019 மீன்பிடி ஒழுங்காற்று முறை மற்றும் மேலாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கடற்கரை ஓர கிராமங்களில் அமைத்துள்ள ரசாயன தொழிற்சாலை களின் கழிவு நீர் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், படகு மற்றும் வலையுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொதுச்செயலர் தங்கேஸ்வரன் வரவேற்றார். நிறுவன தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார்.வழக்கறிஞர் சிவராஜ், மீனவர் வாழ்வுரிமை இயக்க தலைமை நிலைய பொறுப்பாளர் கன்னியப்பன், தமிழ்நாடு பருவதராஜகுல சங்க மாநில தலைவர் கனகசபை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு மீனவர் கிராமங்களை சேர்ந்த தலைவர்கள், பஞ்சாயத்தார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலர் முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X