பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்: சப் கலெக்டர் அதிரடிக்கு மக்கள் பாராட்டு

Added : ஜன 11, 2020
Advertisement
 இரண்டாம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்: சப் கலெக்டர் அதிரடிக்கு மக்கள் பாராட்டு

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் இரண்டாம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்வதால், சப் கலெக்டருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள சன்னதி வீதியில் பக்தர்கள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், வியாபாரிகள் நடைபாதை மீது ெஷட் அமைத்து, கடையை விரிவாக்கம் செய்ததால், பொது மக்கள், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால், இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டன.

இதனால் வேப்பூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில், சப் கலெக்டர் பிரவீன்குமார் நேற்று காலை 8:00 மணி முதல், சன்னதி வீதி, கடைவீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நேரடியாக இறங்கினார்.

அப்போது, நடைமேடை மீது போடப்பட்டிருந்த ஷெட்டுகள் அப்புறப்படுத்தப் பட்டு, தள்ளுவண்டிகள் அதிரடியாக அகற்றப்பட்டன.இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தக் கூடாது என உத்தரவிட்ட அவர், ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த அறிவுறுத்தினார்.தொடர்ந்து, கற்கள், மண் மேடுகளை மண்வெட்டி மூலம் சப் கலெக்டர் பிரவீன்குமார், அகற்றினார்.

மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாசில்தார் கவியரசு, டி.எஸ்.பி., இளங்கோவன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டு, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் பாராட்டு



சப் கலெக்டர் பிரவீன்குமார், நேற்று இரண்டாம் நாளாக காலை 8:00 முதல், பிற்பகல் 12:00 மணி வரை நடந்து சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினார். காலையில் அகற்றப்பட்ட இடங்களை, மாலையில் நேரில் வந்து மீண்டும் ஆய்வு செய்கிறார். இனிமேல் இந்த பகுதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார். சப் கலெக்டரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X