தமிழ்நாடு

இன்று!சேர்மன், துணை சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல்.. .உள்ளடி வேலையில் ஈடுபட கவுன்சிலர்கள் ஆயத்தம்

Added : ஜன 11, 2020
Advertisement
 இன்று!சேர்மன், துணை சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல்.. .உள்ளடி வேலையில் ஈடுபட கவுன்சிலர்கள் ஆயத்தம்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் மாவட்ட சேர்மன், துணை சேர்மன், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன் மற்றும் துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கிடையே பதவி கிடைக்காத கவுன்சிலர்கள் உள்ளடி வேலையில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.

கடலுார் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. இதில், மாவட்ட கவுன்சிலர் பதவி 29, ஒன்றிய கவுன்சிலர் 287, ஊராட்சி தலைவர் 683, வார்டு உறுப்பினர் 5,040 என மொத்தம் 6,039 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 815 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 5,224 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 16,604 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஓட்டுப் பதிவு முடிந்து, அந்தந்த ஒன்றியங்களுக்கு தனித்தனியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 6 ம் தேதி பதவி யேற்றுக் கொண்டனர். வெற்றி வேட்பாளரை மாற்றி அறிவித்ததால், குமளங்குளம் ஊராட்சித் தலைவர் பதவி ஏற்பு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாவட்ட சேர்மன், துணை சேர்மன், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், மொத்தமுள்ள 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், அ.தி.மு.க., 12, பா.ம.க., 2, தே.மு.தி.க., 1 என அ.தி.மு.க., கூட்டணி 15 இடங்களிலும்; தி.மு.க., கூட்டணி 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் மாவட்ட சேர்மன் பதவியை அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதே போல், 14 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 287 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், அ.தி.மு.க., 110, பா.ம.க., 25, தே.மு.தி.க., 17, த.மா.கா., 4, பா.ஜ., 2 என 158 இடங்களையும் பிடித்தன.

தி.மு.க., 83, காங்., 2, மற்றவை 20, சுயேட்சைகள் 24 இடங்களை பிடித்துள்ளன.இதில், அண்ணாகிராமம், கடலுார், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி, கம்மாபுரம், மங்களூர், கீரப்பாளையம், நல்லுார் ஆகிய 12 ஒன்றியங்களை அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியுள்ளன. காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி ஒன்றியங்களை தி.மு.க., கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இதில், கூட்டணி கட்சிகள் உள்ளடியில் ஈடுபட்டால், சேர்மன் பதவிகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே கூட்டணி கட்சிக்கு சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டால், பதவி கிடைக்காத அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் உள்ளடி வேலைக்கு தயாராகி வருகின்றனர்.இதனால், இன்று நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X