பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதை கடை ஒதுக்குவதில் வாக்குவாதம்

Added : ஜன 11, 2020
Advertisement
 நடைபாதை கடை ஒதுக்குவதில் வாக்குவாதம்

கடலுார்:கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதை கடைக்கு இடம் ஒதுக்குவதில், இந்திய கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பை நிலவியது.

கடலுார் பஸ் நிலையத்தில் புதிய கடைகள் கட்டுவதற்காக, நடைபாதையில் கடை வைத்திருந்தவர்கள் காலி செய்யப்பட்டனர். அப்போது அவர்களுக்கு நடைபாதை கடை வைக்க மீண்டும் இடம் ஒதுக்கி தரப்படும் என, நகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.தற்போது புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில், நடைபாதை கடையினர் இடம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவர்களுக்கு மா.கம்யூ., இந்திய கம்யூ., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.கடை ஒதுக்குவது தொடர்பாக, கட்சிகளுக்குள் பிரச்னை இருந்ததால், நீங்களே முடிவு செய்து விட்டு தெரிவியுங்கள் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதன்படி 47 பேருக்கு கடை ஒதுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

இந்நிலையில், நேற்று, நகராட்சி நகர் நல அலுவலர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் அருள், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடத்தை அளந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்களின் ஆதரவாளர்களுக்கு கடை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூ., நிர்வாகி குளோப், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திருமார்பன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மூதாட்டி ஒருவர் கடை கிடைக்காது என நினைத்து, அவரது புடவையால் கழுத்தை இறுக்கிக்கொண்டார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கடை ஒதுக்கப்பட்டு விட்டது. கட்சிகளுக்குள் ஒரு மித்த கருத்து ஏற்பட்ட பின் மீதம் உள்ளவர்களுக்கு கடை ஒதுக்கப்படும் என அதிகாரிகள் கூறி சென் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X