பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுமன்னார்கோவிலில்ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

காட்டுமன்னார்கோயில்:காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் அனந்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் அனந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, இக்கோவிலுக்கு சொந்தமான நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகிய ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது.

நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X